அமர்நாத்தில் 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்: 6,143 பக்தர்களுடன் 13-வது குழு பயணம்

3 hours ago 2

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ளது அமர்நாத் குகைக் கோவில். இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான இக்கோவில் பஹல்காமில் இருந்து சுமார் 48 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் இந்த குகைக் கோவில் அமைந்துள்ளது.

அமர்நாத் குகைக் கோவிலில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க வருடத்தின் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே (ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில்) பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று வருகின்றனர்.

அதன்படி இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை கடந்த 3-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து ஆகஸ்ட் 9-ந்தேதி வரை அமர்நாத் யாத்திரை நடைபெற உள்ளது. அமர்நாத் யாத்திரை தொடங்கியதில் இருந்து இதுவரை 2 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.

இந்தநிலையில், சிஆர்பிஎப் மற்றும் காவல்துறையினரின் துணையுடன், 4,691 ஆண்கள், 1,248 பெண்கள் மற்றும் 17 குழந்தைகள் உள்பட 6,143 பக்தர்களைக் கொண்ட 13வது குழு, பகவதி நகர் அடிப்படை முகாமில் இருந்து இன்றுஅதிகாலை 3:30 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரை 235 வாகனங்களில் புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் யாத்திரைக்காக ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர்.

Read Entire Article