சென்னை,
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
'அமரன்' திரைப்படம் வருகிற 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. சமீபத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 700-வது பாடலும் இப்படத்தின் முதல் பாடலுமான 'ஹே மின்னலே' பாடல் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் படத்தின் புரமோசன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அமரன் படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது. பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்கள், சாய் பல்லவியுடான காதல் காட்சிகள் என டிரெய்லர் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
இப்படத்தின் 'ஹே மின்னலே', 'வெண்ணிலவு சாரல்' பாடல்கள் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.
இந்த சூழலில், 'அமரன்' திரைப்படத்தின் சிறப்புக் காட்சி டெல்லியில் ராணுவ வீரர்களுக்காக திரையிடப்பட்டது. அவர்களிடமிருந்து மிகுந்த பாராட்டுகளைப் பெற்றதாக கூறப்படுகிறது. இந்தத் திரையிடல் நிகழ்ச்சியில் நடிகை சாய் பல்லவி, நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்றனர்.
திரைப்படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் திரைப்படம் உருவான விதம் குறித்தும் அதற்கு ஒவ்வொரு கதாப்பாத்திரம் தங்களை பயிற்சி செய்த விதத்தை பற்றியும் படக்குழு வீடியோவை வெளியிட்டுள்ளனர். நேற்று முனதினம் முதல் அத்தியாயத்தை வெளியிட்டிருந்த நிலையில், நேற்று 2வது அத்தியாயத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது 3வது அத்தியாயத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.