
சென்னை,
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
'அமரன்' திரைப்படம் வருகிற 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடி வீர மரணமடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. சமீபத்தில் 'அமரன்' படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோவை பகிர்ந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது அமரன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 'ஏய் மின்னலே' என்ற பாடல் வருகிற 4-ந் தேதி வெளியாக உள்ளது. இது குறித்த பதிவை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் இப்பாடல் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 700-வது பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.