'அமரன்' படத்தின் டிரெய்லர் வெளியீடு

5 months ago 24

சென்னை,

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

'அமரன்' திரைப்படம் வருகிற 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. சமீபத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 700-வது பாடலும் இப்படத்தின் முதல் பாடலுமான 'ஹே மின்னலே' பாடல் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் படத்தின் புரமோசன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது அமரன் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டிரெய்லரை பான் இந்தியா நட்சத்திர நடிகர்கள் வெளியிட்டுள்ளனர். அதன்படி தமிழில் கமல் ஹாசன், மலையாளத்தில் டோவினோ தாமஸ், தெலுங்கில் நானி, இந்தியில் அமீர்கான், கன்னடத்தில் சிவராஜ் குமார் ஆகியோர் 'அமரன்' படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர்.

Read Entire Article