அப்போ ரத்த ஆறு, இப்போ சமாதானம்..சண்டை வேண்டாம்..கைகுலுக்க வேண்டும்.. பிலாவல் பூட்டோ பேச்சு

5 hours ago 3

இஸ்லமாபாத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்துவதாக இந்தியா அறிவித்ததால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் அதிபர் ஆசிப்அலி சர்தார்ஜி, பாக். முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ தம்பதி மகனும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான பிலாவல் பூட்டோ,’ சிந்து நதியில் தண்ணீரை நிறுத்தினால், அதில் தண்ணீருக்கு பதில் இந்தியர்களின் ரத்தம் ஓடும்’ என்றார். இது பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் நேற்று பாக். நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய பிலாவல் பூட்டோ அப்படியே தலைகீழாக பேசினார். அவர் கூறுகையில்,‘‘ இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து பணியாற்ற வேண்டும். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பஹல்காம் தாக்குதலில் பாரபட்சமற்ற சர்வதேச விசாரணைக்காக இந்தியாவை அழைத்தது நல்ல ஒரு தொடக்கம். இந்தியா அமைதிப் பாதையில் நடக்க விரும்பினால், அவர்கள் திறந்த கைகளுடன் வரட்டும். நாம் அண்டை நாடுகளாக அமர்ந்து உண்மையைப் பேசுவோம். அதே சமயம் போர் ஏற்பட்டால் மோதலுக்காக அல்ல, சுதந்திரத்திற்காக பாகிஸ்தான் போராடும்.

இந்தியா சமாதானத்தை விரும்பவில்லை என்றால் பாகிஸ்தான் மக்களை மண்டியிட வைக்க முடியாது என்பதை அவர்கள் நினைவில் கொள்ளட்டும். பாகிஸ்தான் மக்கள் போராடும் உறுதியைக் கொண்டுள்ளனர், ஏனெனில் நாங்கள் மோதலை விரும்பவில்லை. ஆனால் நாங்கள் சுதந்திரத்தை விரும்புகிறோம். எனவே இந்தியா முடிவு செய்யட்டும். அது உரையாடலா அல்லது அழிவா? ஒத்துழைப்பா அல்லது மோதலா?. ஏனெனில் பயங்கரவாதத்தை ஒரு பீரங்கியால்் மட்டும் தோற்கடிக்க முடியாது. அதை (பயங்கரவாதத்தை) நீதியால் தோற்கடிக்க வேண்டும் ’ என்று பேசினார்.

The post அப்போ ரத்த ஆறு, இப்போ சமாதானம்..சண்டை வேண்டாம்..கைகுலுக்க வேண்டும்.. பிலாவல் பூட்டோ பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article