
ஐதராபாத்,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை-ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது . இந்த போட்டியில் தீபக் சஹர் வீசிய 3-வது ஓவரில் லெக் சைடில் வந்த பந்தினை இஷான் கிஷன் அடிக்க முயன்ற நிலையில் பந்து கீப்பரிடம் சென்றது.பந்துவீச்சாளர் தீபக் சாஹர் உள்ளிட்ட மும்பை வீரர்கள் யாரும் அப்பீல் கேட்காத நிலையிலும் நடுவர் எதிர்பாராத வகையில் அவுட் கொடுத்தார்; இஷான் கிஷன் ரிவ்யூ கேட்காமல் தானாக நடந்து சென்று விட்டார்.
தொடர்ந்து ரிப்ளேவில் பார்த்தபோது பந்து பேட்டில் படாதது தெரியவந்தது. இதனை பார்த்த இஷான் கிஷான் அதிர்ச்சியடைந்தார்.
பேட்டில் படாமல் இஷான் கிஷன் எதற்காக சென்றார், எதற்காக டிஆர்எஸ் அப்பீல் கூட செய்யவில்லை என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.