சேலம், பிப்.5:சேலம் சூரமங்கலத்தில் உள்ள அப்பா பைத்தியம் சுவாமி கோயிலின் 25ம் ஆண்டு குருபூஜை விழா நேற்று நடந்தது. அதிகாலை 4.30 மணிக்கு திருவிளக்கு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம், மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், குடிமை பொருள் துறை அமைச்சர் திருமுருகன் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
The post அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் குருபூஜை விழா appeared first on Dinakaran.