அபிஷேக் சிக்சர் சாதனை

2 hours ago 1

* மொத்தம் 8 வீரர்கள் நடப்புத் தொடரில் தலா ஒரு அரை சதம் விளாசி இருக்கின்றனர். அவர்களில் அபிஷேக் சர்மா உட்பட 5 பேர் இந்திய அணியை சேர்ந்தவர்கள்.

* அதிக பவுண்டரிகள் வெளுத்த வீரர்கள் பட்டியலில் முதலில் இடத்தில் உள்ள அபிஷேக் சர்மா 24 பவுண்டரிகளை பறக்க விட்டுள்ளார். அடுத்து 3 இடங்களில் இங்கிலாந்து வீரர்கள் பென் டக்கட் (15), பிலிப்ஸ் சால்ட் (13), ஜோஸ் பட்லர் (12) உள்ளனர்.

* அதிக சிக்சர்களை பறக்க விட்டவர்கள் பட்டியலிலும் 22 சிக்சர்களுடன் அபிஷேக் சர்மா முதல் இடத்தை பிடித்துள்ளார். அவருக்கு அடுத்த 2 இடங்களில் உள்ள இந்திய வீரர்கள் திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 7 சிக்சர்களை தங்கள் கணக்கில் வைத்துள்ளனர்.

* அதிக விக்கெட் அள்ளியவர்கள் பட்டியலில் வருண் சக்கரவர்த்தி முதலிடத்தில் உள்ளார். இவர் 5 ஆட்டங்களிலும் மொத்தம் 14 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். அடுத்து 2 இடங்களில் இங்கிலாந்து வீரர்கள் பிரெய்டன் கார்ஸ் (9), ஜாமி ஓவர்டன் (7) ஆகியோர் உள்ளனர்.

* அதிக விக்கெட் அள்ளியவர்கள் பட்டியலில் மட்டுமின்றி, சிறந்த பந்து வீச்சு சராசரி (9.86), சிறந்த பந்து வீச்சு (5/24), ஒரு ஆட்டத்தில் 5 விக்கெட் எடுத்த ஒரே வீரர் என எல்லாவற்றிலும் முதல் இடத்தை வருண் சக்கரவர்த்தி தான் அள்ளி இருக்கிறார்.

* ரன் குவிப்பில் முதல்வன்
1.அபிஷேக் சர்மா 5 ஆட்டம் 279 ரன்
2.ஜோஸ் பட்லர் 5 ஆட்டம் 146 ரன்
3.திலக் வர்மா 5ஆட்டம் 133 ரன்
இந்த தொடரில் சதம் விளாசிய ஒரே வீரர் இந்தியாவின் அபிஷேக் சர்மா மட்டுமே. இவர் 5வது ஆட்டத்தில் விளாசிய 135 ரன் தான் தொடரில் ஒரு வீரர் விளாசிய அதிகபட்ச ரன்.

The post அபிஷேக் சிக்சர் சாதனை appeared first on Dinakaran.

Read Entire Article