அன்புமணியை நீக்கியது ஏன்? ராமதாஸ் பரபரப்பு அறிக்கை

1 week ago 5


திண்டிவனம்: அன்புமணியை கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்கியது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு முழுவதும் பயணித்து பரப்புரை செய்து பல கட்ட போராட்டங்கள், மாநாடுகள், பேரணிகளை நடத்தி நான் வன்னியர் சங்கத்தை வளர்த்தேன். அதன் தொடர்ச்சியா 1989-ல் பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கி அமைப்பு ரீதியாக மிக வலிமையாக கட்டமைத்தேன். இந்நிலையில், கட்சி மற்றும் சங்கத்தின் புதிய தலைமுறையினர் எனது தலைமையின் கீழ் சிறிதுகாலம் பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலும், 2026-ல் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும் பல்வேறு செயல் திட்டங்களை வகுத்துள்ளேன்.

அதனை செயல்படுத்த வேண்டி கட்சி அமைப்பில் சில மாற்றங்களை செய்துள்ளனே். இதன் அடிப்படையில் பாமகவை தொடங்கிய நிறுவனர் ராமதாசு ஆகிய நான் நிறுவனர் என்பதோடு பாமகவின் தலைவர் பொறுப்பையும் நானே ஏற்றுகொள்கிறேன். பாமக தலைவராக இருக்கும் அன்புமணி ராமதாசை கட்சியின் செயல் தலைவராக நியமனம் செய்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post அன்புமணியை நீக்கியது ஏன்? ராமதாஸ் பரபரப்பு அறிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article