எத்தனையோ செயலிகளை நம் மொபைல் சுமக்கிறது. அவற்றில் குறிப்பாக அன்னையர் பயன்படுத்த வேண்டிய செயலிகளின் பட்டியல் இதோ. இந்தச் செயலிகளை குழந்தைக்கான திட்டத்தில் இருக்கும் பெண்கள் மட்டுமல்ல , ஆண்களும் பயன்படுத்தலாம். குழந்தை வளர்ப்பு என்பது பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் தான்.
BabyCenter
கர்ப்பகாலம் முதல் குழந்தை வளர்ப்பு வரை வழிகாட்டும் பயன்பாடு. மருத்துவர் சிபாரிசுகள், வளர்ச்சி மைல்கற்கள், ஆலோசனைகள் அனைத்தும் இந்த செயலியில் பெறலாம். கிட்டத்தட்ட ஒரு டிஜிட்டல் அம்மாவாகவே இருந்து இன்னொரு அன்னைக்கு இந்தச் செயலி உதவும்.
FirstCry Parenting
குழந்தை பராமரிப்பு, உணவுப் பரிந்துரைகள், பெற்றோர்களுக்கான ஆலோசனைகள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான பொருட்களும் இந்தச் செயலியில் பெறலாம்.
Kinedu
0-4 வயது குழந்தைகளுக்கான வளர்ச்சி செயல்பாடுகள், வீடியோக்கள் மற்றும் செயல்முறைகள். அவர்களுடன் மனதளவில் நெருக்கமாகி அவர்கள் உலகில் இருந்து அவர்களை வளர்க்கும் பயிற்சிகளும் இதன் மூலம் பெறலாம்.
Momspresso
தமிழ் உட்பட பல மொழிகளில் பெற்றோர் கட்டுரைகள், வீடியோக்கள், ஆலோசனைகள், அனுபவங்கள் அடங்கிய ரியல் டைம் வழிகாட்டியாக இந்தச் செயலி உதவும்.
My FitnessPal
தாய் உடல் ஆரோக்கியத்தை பேணவும், உடல் எடையை கண்காணிக்கவும் உதவும் செயலி. பெரும்பாலான பெண்களின் உடல் எடை கூடுவது குழந்தைப் பேறுக்குப் பிறகுதான் என்கையில் உணவு மற்றும் உடற்பயிற்சி இரண்டும் சரியாக வடிவமைக்கப்பட்டது இந்தச் செயலி.
UrbanClap (இப்போது Urban Company)
வீட்டுப் பணிகள், சுகாதார பராமரிப்பு, குழந்தை பராமரிப்பு போன்ற சேவைகளை வீட்டிலேயே பெற உதவும். மேலும் குழந்தைக்கு குறிப்பிட்ட வயது வரும் வரை பார்லர் சேவைகள் கூட எடுத்துக் கொள்ள முடியாத நிலை நீடிக்கும். எனினும் அன்னையரின் தோற்றமும் அவர்களை உற்சாகமாக வைக்கும் காரணி என்பதால் வீட்டிலேயே பார்லர் சேவை எடுத்துக்கொள்ள இந்தச் செயலிகள் உதவும்.
Headspace
மனஅழுத்தம் குறைக்க தியானம் மற்றும் யோகா, மன அமைதிக்கான பயிற்சிகள் வழங்கும் செயலி. டெலிவரிக்குப் பிறகான மன அழுத்தம், தேவையற்ற சிந்தனைகளை போக்க இந்தச் செயலி உதவும்.
Instamart செயலிகள்
Bigbasket, Blinkit, Zepto போன்ற செயலிகளும் வைத்துக் கொள்வது நல்லது. திடீர் தேவைகளுக்குப் பொருட்கள் வாங்கி கொள்ள இந்தச் செயலிகள் உதவும்.
Flo / Clue
பெண்கள் ஆரோக்கியத்திற்கான ஹார்மோன் சுழற்சி கண்காணிப்பு பயன்பாடுகள். மாதவிடாய், அதனால் உண்டாகும் மன மாற்றங்கள், உடல் மாற்றங்கள் அதற்கான வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள் இந்தச் செயலிகளில் பெறலாம்.
Baby Tracker
குழந்தையின் உணவு நேரம், பாலுக்கான நேரம், தூக்கம், டயப்பர் மாற்றம் போன்றவை பதிவு செய்யவும் கண்காணிக்கவும் உதவும் செயலி. இதன் மூலம் குழந்தை ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்குகிறது. அதிக பசியால் எப்போது அழுகிறது போன்ற நேரக் கண்காணிப்புகள் கிடைக்கும். ஒருவேளை வேலைக்குச் செல்லும் பெண் எனில் பால் சேமித்து வைத்துவிட்டுச் செல்லக் கூட இந்தக் கணக்கீடு உதவும்.
Sprout Baby
குழந்தையின் வளர்ச்சி பதிவு, மருத்துவர் சந்திப்பு நினைவூட்டல், மருத்துவ பதிவுகள், குறித்த நினைவூட்டல், அன்னையர் கடைபிடிக்க வேண்டிய மருத்துவ ஆலோசனைகளுக்கான நினைவூட்டல் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த ரிமைண்டர் செயலியாக இந்தச் செயலி செயல்படும்.
PBS Kids Games
பொதுவாக 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கு அன்னையின் கவனிப்புடன், குறிப்பாக அவர்களுடன் விளையாட்டு நேரமும் மிக அவசியம். இந்த மூன்று வருடங்கள் குழந்தை மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது அவசியம். எனவே அவர்களுடன் அன்னையரும் இணைந்து விளையாடக் கூடிய சில விளையாட்டு வழிகாட்டுதல்கள், முறைகள் இந்தச் செயலியில் பெறலாம். இது குழந்தைக்கும், தாய்க்குமான பந்தத்தை மேலும் நெருக்கமாக்கும்.
– கவின்.
The post அன்னையருக்கு உதவும் மொபைல் ஆப்ஸ்! appeared first on Dinakaran.