கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில், அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். அப்போது, அவர் அளித்த பேட்டி: அதிமுகவை பொறுத்தவரை வக்பு சட்டத்தை இன்னும் ஆய்வு செய்து இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி எதிர்த்து வருகிறோம். அதிமுகவில் பிரிந்துள்ள அனைவரும் ஒன்று சேர வேண்டும் என சைதை துரைசாமி கூறியுள்ளார். அதிமுகவில் ஏதோ ஒரு காலத்தில் பொறுப்புகள் வகித்த சைதை துரைசாமிக்கு பல்வேறு கட்சியில் தொடர்பு உள்ளது.
அவர் அதிமுகவுக்கு தொடர்பு இல்லாதவர். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவரது பணியை சரியாக செய்கிறார். தேவை இல்லாமல் அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சிலர் முயற்சி செய்து வருகின்றனர். தவெக தலைவர் விஜய் கச்சதீவை குத்தகை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இது அவரது கருத்து. இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் தான் முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post ‘‘அனைவரும் ஒன்றிணைய வேண்டும்’’ சைதை துரைசாமி கருத்துக்கு கே.பி.முனுசாமி எதிர்ப்பு appeared first on Dinakaran.