
சென்னை,
அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கடந்த 28-ம் தேதி டெல்லி சென்று மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசிவிட்டு வந்தார். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக அவர்கள் பேசி இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக செங்கோட்டையனுக்கு பாதுகாப்பு மேலும் பலப்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தநிலையில், செங்கோட்டையன் இன்று மீண்டும் டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. அதன்படி அவர் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக, டெல்லி போறீங்களா? தொடர்ச்சியாக மவுனமாகவே இருக்க காரணம் என்ன? என்ற செய்தியாளர் கேள்விகளுக்கு..மவுனம் அனைத்தும் நன்மைக்கே என டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்து சென்றார். நாளை அவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது.