ஈரோடு,அக.19: அனைத்து வகையான வரி உயர்வையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம், பொதுச் செயலாளர் ரவிசந்திரன் ஆகியோர் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பிபுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
வணிக கட்டிட வாடகைக்கு, 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது.மேலும், 30 சதவீத வருமான வரி,வாடகை வருமானத்துக்கு அளிக்க வேண்டி உள்ளது. தவிர குப்பை வரி,பாதாள சாக்கடை வரி,ஆண்டு தோறும் 6 சதவீத கூடுதல் சொத்து வரி உயர்வை மக்களால் ஏற்க முடியாது.
சிறு தொழில் முனைவோர்,சிறு வியாபாரிகள் சொந்த கட்டடம் கட்டினால்,வாடகைக்கு மேல் வரி கட்ட வேண்டி வரும்.இதனால் கட்டட வாடகையும் உயரும். எனவே, இவ்வகையான அனைத்து வரி உயர்வையும் திரும்ப பெற்றும், ஏற்கனவே உள்ள சொத்து வரியை குறைத்தும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அனைத்து வகையான வரி உயர்வையும் ரத்து செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.