அனைத்து வகை பள்ளிகளிலும் பாலியல் குற்ற தடுப்பு விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும்: பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

4 hours ago 2

சென்னை: பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகைப் பள்ளிகளில் பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல் உள்ளிட்ட பாலியல் தொடர்பாக குற்றங்கள் தடுப்பதற்கான உரிய வழிகாட்டு நெறிகளை பள்ளிக்கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ளார். இதை அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

* பாலியல் குற்றங்கள் நடக்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அனைத்து ஆசிரியர்களுக்கும் இந்த கல்வியாண்டில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அடுத்த 6 மாத காலத்துக்குள் முறையான பயிற்சி அளிப்பதை உறுதி செய்ய வேண்டும். அதன் பின்னர் 6 மாதத்துக்கு ஒரு முறை புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும்.

* மாணவியர் பயணம் செய்யும் பள்ளி வாகனங்களில் பெண் உதவியாளர்கள் பணியமர்த்த வேண்டும்.

* விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்வுகள், கல்விச் சுற்றுலா போன்ற நிகழ்வுகளுக்கு பெண் ஆசிரியர்களே மாணவியரை அழைத்துச் செல்ல வேண்டும். தேசிய மாணவர் படை நாட்டு நலப்பணித் திட்டம், சாரண சாரணிய இயக்க முகாம்களில் மாணவியருடன் பெண் ஆசிரியர்கள் மட்டுமே தங்குவது உறுதி செய்யப்பட வேண்டும்

* பெண்கள் படிக்கும் பள்ளிகளில் பெண்கள் மட்டுமே இருத்தல் வேண்டும். இருபாலர் பள்ளிகளில் குறைந்தது 50 சதவீதம் பணியாளர்கள் பெண்களாக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அனைத்து வகை பள்ளிகளிலும் பாலியல் குற்ற தடுப்பு விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும்: பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article