திருமலை: அனைத்து துறைகளிலும் ஊழலை ஒழிக்க 500 ரூபாய் நோட்டுகளை தடை செய்ய வேண்டும் என ஆந்திர முதல்வர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஆந்திர மாநிலம், விஜயவாடாவில், எப்.ஐ.சி.சி.ஐ. சார்பில் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசியதாவது: வரும் நாட்களில், பல்வேறு வகையான டிரோன்கள் தொழில்நுட்பத்துடன் மனிதகுலத்திற்கு பல வகையான சேவைகளை கிடைக்கச் செய்யும் தொழில்நுட்பம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறும். டிரோன்களின் உதவியுடன் போலீசார் தற்போது இரவில் ரோந்து செல்கின்றனர்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் அறிவைக் கொண்டு பல அற்புதங்கள் உருவாக்கப்படுகின்றன. ஐதராபாத் வளர்ந்தது போல அமராவதி புதிய வழியில் உருவாக்கப்படும். ஏற்கனவே ரூ.1,000, ரூ.2,000 நோட்டுகள் தடை செய்யப்பட்டது போல் ரூ.500 நோட்டுகளையும் தடை செய்ய வேண்டும். ஊழலில் மூழ்கிய பல அரசியல் கட்சியினர் பணத்தால் வாக்குகளை பெறலாம் என உள்ளனர். டிஜிட்டல் பண பரிமாற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அப்போது தான் அனைத்து துறையிலும் ஊழலை ஒழிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
The post அனைத்து துறைகளிலும் ஊழலை ஒழிக்க 500 ரூபாய் நோட்டுகளை தடை செய்ய வேண்டும்: ஆந்திர முதல்வர் மீண்டும் வலியுறுத்தல் appeared first on Dinakaran.