அனைத்து தீய சக்திகளுக்கும் பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும் :பாகிஸ்தான் தாக்குதல் குறித்து இந்திய ராணுவம் விளக்கம்!!

7 hours ago 2

டெல்லி : பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்ததாக இந்திய ராணுவம் வீடியோவுடன் விளக்கம் அளித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து வரலாறு காணாத தாக்குதல் தொடர்வதால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. நேற்று இரவு ஜம்மு – காஷ்மீர் விமான நிலையம், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ், பதன்கோட், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரை குறிவைத்து பாக். படைகள் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின. இவற்றை இந்தியா விமானப்படை நடுவானில் சுட்டு வீழ்த்தியது. 4 பாக். விமானங்கள், 8 ஏவுகணைகள் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன.

3வது நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக இந்திய ராணுவத்தின் எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிரப்பட்ட பதிவில், “பாகிஸ்தான் ராணுவம் மே 8-9 தேதிகளில் இடைப்பட்ட இரவில் இந்தியாவின் மேற்கு எல்லைகளை ஒட்டியப் பகுதிகளைக் குறிவைத்து ட்ரோன் மற்றும் வேறு சில ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல்களில் ஈடுபட்டது. அதேபோல் ஜம்மு – காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகேயும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதலில் ஈடுபட்டது.பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்கள் திறம்பட முறியடிக்கப்பட்டதோடு, எல்லையில் நடந்த பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்களுக்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டன. தேசத்தின் இறையாண்மையைப் பாதுகாப்பதிலும், பிராந்திய ஒருமைப்பாட்டைப் பேணுவதிலும் இந்திய ராணுவம் உறுதியுடன் உள்ளது. அனைத்து தீய சக்திகளுக்கும் பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளது.

The post அனைத்து தீய சக்திகளுக்கும் பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும் :பாகிஸ்தான் தாக்குதல் குறித்து இந்திய ராணுவம் விளக்கம்!! appeared first on Dinakaran.

Read Entire Article