அனைத்து கட்சி கூட்​டத்​துக்கு அழைப்பில்லை என வழக்கு தொடர்ந்த கட்சிக்கு அறி​வுறுத்​தல்

3 hours ago 2

சென்னை: மக்​கள​வைத் தொகு​தி​கள் மறுசீரமைப்பு விவ​காரம் குறித்து விவா​திக்க தமிழக அரசு நாளை (மார்ச் 5) அனைத்​துக் கட்சி கூட்​டத்தை நடத்​துகிறது. இதற்​காக 45 கட்​சிகளுக்கு அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில் பதிவு பெற்ற தேசிய மக்​கள் சக்தி கட்​சிக்கு அழைப்பு விடுக்​க​வில்லை என்​றும் அதனால் இந்த கூட்​டத்​துக்கு தடை விதிக்க கோரி​யும் அக்​கட்​சி​யின் தலை​வர் வழக்​கறிஞர் எம்​.எல்​.ரவி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தார்.

அதில், தமிழகத்​தில் மொத்​தம் 183 அரசி​யல் கட்​சிகள் உள்​ளன. தமிழக அரசு தங்​களுக்கு ஏது​வாக 45 அரசி​யல் கட்​சிகளை மட்​டும் அழைத்​துள்​ளது ஏற்​புடையதல்ல. எனவே எங்​களது கட்​சி​யை​யும் அழைக்க உத்​தர​விட வேண்​டும் எனக் கோரி​யிருந்​தார்.

Read Entire Article