
சென்னை,
அனுஷ்கா ஷெட்டியின் ''காதி'' படம் ஜூலை 11-ம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.
இந்நிலையில், இளம் நடிகர் சுஹாஸ் பாக்ஸ் ஆபீஸில் அனுஷ்காவுடன் மோத உள்ளார். அவர் நடித்துள்ள ''ஓ பாமா அய்யோ ராமா''வும் ஜூலை 11-ம் தேதி வெளியாக இருக்கிறது.
படக்குழுவின் இந்த துணிச்சலான செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இப்படத்தில் ''ஜோ'' புகழ் மாளவிகா மனோஜ் கதாநாயகியாக நடிக்கிறார். இதன் மூலம் அவர் தெலுங்கில் அறிமுகமாக இருக்கிறார். இதை ராம் கோதலா இயக்குகிறார்.