கெங்கவல்லி, பிப்.10: கடந்த 4ம்தேதி வளையாமாதேவி பாரில் சாராயம், மதுபானம் விற்கப்படுவதாக வெளியான வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் எதிரொலியாக, அனுமதி இல்லாமல் இயங்கி வந்த 15க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பார்களுக்கு மதுவிலக்கு தாசில்தார் சுமதி தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர்.
நேற்று கெங்கவல்லி, தும்பல், உமையாள்புரம் பகுதியில் இயங்கி வந்த பார்கள் மதுவிலக்கு போலீசாரால் சீல் வைக்கப்பட்டது. மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்த, உமையாள்புரம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன்(32), ஆணையாம்பட்டியை சேர்ந்த குணசேகர்(44), தும்பல் பகுதியைச் சேர்ந்த மணி(34) ஆகிய மூன்று பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். தலைவாசல் போலீசார் ஊனத்தூர் பகுதியைச் சேர்ந்த அல்லிமுத்து(54), நாவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பெரியசாமி(34) ஆகிய
இருவரையும் கைது செய்தனர்.
The post அனுமதியில்லாத 3 பார்களுக்கு சீல் appeared first on Dinakaran.