அனுமதியின்றி மரக்கிளை வெட்டிய நபர்கள் மீது புகார்

3 weeks ago 4

கடத்தூர், டிச.31:கடத்தூர் பேரூராட்சியில், கடத்தூர்-தர்மபுரி மெயின்ரோட்டில் தனியார் மருத்துவமனை உள்ளது. மருத்துவமனை முன்பாக நெடுஞ்சாலை துறையின் பராமரிப்பில் உள்ள சாலையோர புளியமரத்தின் கிளைகளை, தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர், நேற்று முன்தினம் அதிகாரிகள் அனுமதி இல்லாமல் வெட்டி அகற்றி உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் நெடுஞ்சாலைத்துறைக்கு புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில், பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலை உதவி பொறியாளர் நரசிம்மன், மரக்கிளைகளை வெட்டி அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post அனுமதியின்றி மரக்கிளை வெட்டிய நபர்கள் மீது புகார் appeared first on Dinakaran.

Read Entire Article