அனல் கக்கும் வெயில் ராதாமங்கலத்தில் ஒன்றிய அரசை கண்டித்து கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய திமுக ஆர்ப்பாட்டம்

3 days ago 4

கீழ்வேளூர், மார்ச் 30: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கீழ்வேளூர் கடை தெரு, ராதாமங்கலம் மதகடி ஆகிய இடங்களில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ. 4034 கோடி நிதியை வழங்காமல் தமிழ் நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து, ஒன்றிய தி.மு.க. செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினர் கோவிந்தராசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டங்களில் திமுக மூத்த முன்னோடி சேதுராமன், தகவல் தொழில் நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஆத்மநாதன், மாவட்ட பிரதிநிதிகள் நடராஜன், வீரமணி, ஷேக்முகமது, ஒன்றிய துணைச் செயலாளர்கள் வேதநாயகம், ரவிக்குமார், வெண்ணிலா பாபு, பொருளாளர் பாரதி மோகன், மாவட்ட சார்பு அணி துணை அமைப்பாளர்கள் ஜவகர் பாட்சா, அங்கடிசேகர், ஒன்றிய சார்பு அணி, அமைப்பாளர்கள் பொறியாளர் அணி கோபி, மகளிர் அணி சித்ரா, தகவல் தொழில் நூட்ப அணி கணேசன், மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் சுபாஷினி, மற்றும் ஜெய்சங்கர், உள்ளாட்சி அமைப்பு முன்னாள் பிரதிநிதிகள், கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post அனல் கக்கும் வெயில் ராதாமங்கலத்தில் ஒன்றிய அரசை கண்டித்து கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய திமுக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article