அனந்தபுரி, உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் படுக்கை வசதி பெட்டி குறைப்பு

3 days ago 6

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு செல்லும் அனந்தபுரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வ.எண்:20635) வருகிற ஜூலை 2-ந்தேதி முதல் ஒரு படுக்கை வசதி பெட்டி குறைக்கப்படுகிறது. அதற்கு பதிலாக, கூடுதலாக ஒரு 2-ம் வகுப்பு பொது பெட்டி இணைக்கப்படுகிறது. இதே மாற்றங்கள், கொல்லத்தில் இருந்து ஜூலை 3-ந்தேதி புறப்பட்டு எழும்பூர் வரும் ரெயிலிலும் (20636) பின்பற்றப்படும்.

ஜூலை 1-ந்தேதி முதல் தஞ்சாவூரில் இருந்து எழும்பூர் வரும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16866) ஒரு படுக்கை வசதி பெட்டி குறைக்கப்படுகிறது. அதற்கு பதிலாக, கூடுதலாக ஒரு 2-ம் வகுப்பு பொது பெட்டி இணைக்கப்படுகிறது. இதே மாற்றங்கள், எழும்பூரில் இருந்து ஜூலை 4-ந்தேதி புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும் ரெயிலிலும் (16865) கொண்டுவரப்பட்டுள்ளது.

எழும்பூரில் இருந்து ஜூலை 1-ந்தேதி புறப்பட்டு கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16101) ஒரு படுக்கை வசதி பெட்டி குறைக்கப்படுகிறது. அதற்கு பதிலாக, கூடுதலாக ஒரு 2-ம் வகுப்பு பொது பெட்டி இணைக்கப்படுகிறது. இதே மாற்றங்கள், கொல்லத்தில் இருந்து ஜூலை 2-ந்தேதி புறப்பட்டு எழும்பூர் வரும் ரெயிலிலும் (16102) பின்பற்றப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article