அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை

6 months ago 22

அந்தியூர், அக்.22: தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் மாலை கருமேகங்கள் சூழத்தொடங்கின. தொடர்ந்து இரவு 7 மணி முதல் கன மழை கொட்டி தீர்த்தது.

அந்தியூர் நகர் பகுதி மட்டுமல்லாமல், அத்தாணி, ஆப்பக்கூடல், குருவரெட்டியூர்,‌ புது மாரியம்மன் கோவில், சென்னம்பட்டி, எண்ணமங்கலம், விளாங்குட்டையூர் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளிலும் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், அந்தியூர்-பர்கூர் சாலையில் மழைநீர் கழிவுநீருடன் சேர்ந்து பெருக்கெடுத்து ஆறு போல் ஓடியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து ஒவ்வொரு முறையும் கனமழை பெய்யும் போது அந்தியூர்-பர்கூர் சாலையில் கழிவுநீருடன் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதி வியாபாரிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை appeared first on Dinakaran.

Read Entire Article