சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக எம்எல்ஏ.க்கள் தங்களது சட்டைகளில் ‘அந்த தியாகி யார்?’ என்று எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக கவனம் ஈர்க்கும் வகையில், இன்று (ஏப்.7) தமிழக சட்டப்பேரவை அமர்வில் கலந்து கொள்ள வந்திருந்த அதிமுக எம்எல்ஏ.,க்கள், இவ்வாறு பேட்ஜ் அணிந்திருந்தனர்.
ஏற்கனவே கடந்த வாரம் திருச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் ‘அந்த தியாகி யார்?’ என்ற தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைக்கே அதிமுக எம்எல்ஏ.,க்கள் பேட்ஜ் அணிந்து வந்துள்ளனர்.