
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல் சமீபத்திய பேட்டியில், கணுக்காலில் ஏற்பட்ட காயம் விரைவில் குணமாக தனது சிறுநீரை குடித்ததாக கூறி இருந்தார். இது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது.
இந்நிலையில், பரேஷ் ராவலை தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகை அனு அகர்வாலும் சிறுநீரை குடித்ததாக கூறி இருக்கிறார். இது தற்போது பேசு பொருளாகி உள்ளது.
அவர் கூறுகையில், 'சொந்த சிறுநீரை குடிப்பது யோகாவில் ஒரு பயிற்சி. அது 'ஆம்ரோலி' என்று அழைக்கப்படுகிறது. இதனை நான் முயற்சி செய்திருக்கிறேன். ஆனால், நாம் முழு சிறுநீரையும் குடித்துவிட கூடாது. ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே குடிக்க வேண்டும். அது அமிர்தம்.
இது சருமத்தை சுருக்கமில்லாமல் வைத்திருக்க உதவும். ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் இது உதவும். அதன் நன்மைகளை நான் அனுபவித்திருக்கிறேன்" என்றார்.