அதிவேகமாக வந்த கார் மோதி பெண் காவலர் கால் முறிந்தது

3 months ago 15

அண்ணாநகர்: கோயம்பேடு காவல் நிலைய போக்குவரத்து பிரிவில் காவலராக பணிபுரிபவர் லோகேஸ்வரி (23). இவர் நேற்று காலை பணியை முடித்து விட்டு, அரும்பாக்கம் 100 அடி சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த கார் மோதி இவர் தூக்கி வீசப்பட்டார். இதில், அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள், பெண் காவலரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பெண் காவலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, விபத்து ஏற்படுத்தியவர், காரை விட்டு கீழே இறங்கி அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றார். அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.அதன் பின்னர் கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்து ஏற்படுத்திய மீட்டனர். விசாரணையில் அடையாறு பகுதியில் உள்ள ஒரு கார் ஷோரூம் மேனேஜர் நந்தகுமார் (29) என தெரியவந்தது. இவர் மதுபோதையில் இருந்தாரா, என விசாரணை செய்து வருகின்றனர்.

The post அதிவேகமாக வந்த கார் மோதி பெண் காவலர் கால் முறிந்தது appeared first on Dinakaran.

Read Entire Article