
பெங்களூரு,
கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தின் புறநகர் பகுதியில் 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறாள். இந்தநிலையில், சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்து வந்தனர். இதையடுத்து அந்த வாலிபர், சிறுமியின் பெற்றோரிடம் தங்களது மகளை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
இதற்கிடையில், கடந்த 7-ந்தேதி சிறுமியின் வீட்டுக்கு தனது நண்பருடன் சென்ற வாலிபர், அவளை மது அருந்த கட்டாயப்படுத்தி கூட்டுக் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் இதை வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என வாலிபர் மிரட்டி உள்ளார். இந்தநிலையில், நேற்று முன்தினம் சிறுமி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறினாள்.
அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் பெலகாவி புறநகர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று வாலிபரின் நண்பரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள காதலரை போலீசார் தேடி வருகின்றனர்.