அதிர்ச்சி சம்பவம்: பள்ளிக்குள் புகுந்து சிறுமியின் கன்னத்தை கடித்து குதறிய தெரு நாய்

4 weeks ago 8

பரமக்குடி,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சரஸ்வதி நகரில், தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் எல்.கே.ஜி படித்து வரும் 4 வயது சிறுமி, வகுப்பறையில் இருந்து கழிப்பறைக்கு சென்றுள்ளார். அப்போது பள்ளி வளாகத்திற்குள் கூட்டமாக வந்த தெரு நாய்கள், சிறுமியை துரத்தி உள்ளது.

பயந்து ஓடிய சிறுமியை நாய் ஒன்று கடித்து, முகத்தில் கொடூரமாக தாக்கியது. மாணவியின் அலறல் சத்தத்தை கேட்ட அருகில் இருந்த பணியாளர்கள், நாயை துரத்தி சிறுமியை மீட்டனர். முகத்தில் ரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி பரமக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின் தகவல் அறிந்து வந்த பெற்றோர்கள் சிறுமியை பார்த்து கதறி அழுதனர்.

பரமக்குடியில் தெருநாய்கள் பொதுமக்களையும் குழந்தைகளையும் கடித்து குதறுவது வாடிக்கையாகி வரும்நிலையில், நகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. 

Read Entire Article