அதிமுகவில் கள ஆய்வுக்குழு அமைப்பு

2 months ago 14

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள் செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்து, அவற்றின் பணிகளை மேம்படுத்துவது குறித்தான கருத்துகளைப் பெற்றிடவும் புதுப்பிக்கப்பட்ட கழக உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் முழுமையாக கழக உறுப்பினர்கள் அனைவரிடமும் சென்றடைந்ததா என்பதை உறுதி செய்தும், அதன் விபரங்களை அறிக்கையாக அளிப்பதற்காக அதிமுக சார்பில் கள ஆய்வுக் குழு' அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் உறுப்பினர்களாக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செ.செம்மலை, பா.வளர்மதி, வரகூர் அ.அருணாசலம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட குழுவினர், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று கள ஆய்வு செய்து, அதன் விபரங்களை 7.12.2024-க்குள் அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டங்களுக்கு வருகை தரும் கள ஆய்வுக் குழுவினர், அனைத்து இடங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்வதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்திட வேண்டும். கழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியை, முழு கவனத்துடன் செய்திடுமாறு மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article