அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய மனுக்கள் மீது பிப்ரவரி 12-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் பதவி உள்ளிட்ட கட்சி விவகாரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க கூடாது என்று கோரி முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், அதுதொடர்பான மனுக்களை விசாரிக்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்துள்ளது.