அதிமுக மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து தளவாய் சுந்தரம் நீக்கம்

3 months ago 23

சென்னை,

அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். பேரணியை தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்திருந்த நிலையில், கட்சியின் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாக கூறி எடப்பாடி பழனிசாமி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாகவும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு நடந்துகொண்டதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டி இருப்பதால், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த என். தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ., தான் வகித்து வரும் கழக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article