அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்

3 months ago 19

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில், செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், வல்லக்கோட்டை பகுதியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் முனுசாமி தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் செந்தில்ராஜன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், அதிமுக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்எல்ஏ பழனி ஆகியோர் கலந்துகொண்டு கட்சி வளர்ச்சி குறித்தும், மக்கள் நல பணிகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

இதில், இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் தியாகராஜன், வல்லக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை தசரதன், வல்லக்கோட்டை கிளை செயலாளர்கள் ஆனந்தன், குணசேகரன், துரைபாஸ்கர், சுரேஷ் பாபு, சரவணன், நரேஷ், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article