சென்னை: அதிமுக சார்பில் நலிந்த அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்கள் 171 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வருகிற 4ம் தேதி எடப்பாடி வழங்குகிறார். இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: உழைப்போர் திருநாளாம் மே தினத்தை முன்னிட்டு அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவையில் உறுப்பினர்களாக உள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதியுதவி ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வருகிற 4ம் தேதி காலை 10.30 மணிக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் செயல்பட்டு வரும் போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 171 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.1 கோடியே 71 லட்சம் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும்.
The post அதிமுக சார்பில் நலிந்த அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்கள் 171 பேருக்கு தலா ரூ.1 லட்சம்: வருகிற 4ம் தேதி எடப்பாடி வழங்குகிறார் appeared first on Dinakaran.