அதிமுக கட்சித் தலைமை மீது விமர்சனம் அதிகரிப்பால் வீடியோ வெளியீடு?: செங்கோட்டையனுக்கு ஆர்.பி.உதயகுமார் பதில்!

3 months ago 10

சென்னை: என்னை சோதிக்காதீர்கள் என்று செங்கோட்டையன் நேற்று எச்சரித்த நிலையில் ஆர்.பி.உதயகுமார் வீடியோ வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவை அதிமுகவின் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். இவ்விழாவில் பேசிய செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி பெயரை தவிர்த்து உரையாற்றினார். மேலும், அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான், என்னை சோதிக்காதீர்கள் என்றும் அவர் கூறினார்.

எடப்பாடி பழனிசாமி தலைமை மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ள நிலையில் ஆர்.பி.உதயகுமார் திடீர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது; மக்களுக்காக உழைக்கின்ற இயக்கம் அதிமுக. அதிமுகவுக்கு வரும் சோதனைகளை தொண்டர்கள் மனவலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அசைத்து பார்க்க முடியாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் மறு உருவம் எடப்பாடி பழனிசாமி என்று அவர் தெரிவித்து இருக்கிறார். மேலும், எதிரிகள் எடுத்து வைக்கும் வாதங்கள் அதிமுகவுக்கு எந்த சேதாரத்தையும் ஏற்படுத்தாது. சந்தித்த சோதனைகள் அத்தனையையும் தகர்த்து அதிமுகவை வழிநடத்தி செல்கிறார் எடப்பாடி என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

The post அதிமுக கட்சித் தலைமை மீது விமர்சனம் அதிகரிப்பால் வீடியோ வெளியீடு?: செங்கோட்டையனுக்கு ஆர்.பி.உதயகுமார் பதில்! appeared first on Dinakaran.

Read Entire Article