தமிழக சட்டப் பேரவையில் நேற்று ஆதிதிராவிடர் நலத்துறை, சுற்றுச்சூழல் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் நிலக்கோட்டை தேன்மொழி (அதிமுக) பேசியதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் நல்வாழ்வுக்காக ஒதுக்கப்படும் நிதியை மடைமாற்றம் செய்யப்படுவதை தடுக்க வேண்டும். ஆணவ கொலைகளை தடுக்க தமிழக அரசு தனி சட்டம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். ஆதிதிராவிடர் நலத் துறை விடுதிகளில் நூற்றுக்கணக்கான சமையலர்கள், சமையல் செய்யும் உதவியாளர்கள் பணிபுரிகிறார்கள். ஆனால், ஒருங்கிணைந்த சமையற்கூடம் அமைத்து தனியார் மூலம் விடுதி மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை சென்னையில் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனால் நூற்றுக்கணக்கான பணியிடங்கள் பறிபோகும். எனவே, அரசு இந்த திட்டத்தை ரத்து செய்து, முன்னர் உள்ளது போன்று விடுதிகளில் உணவு சமைத்து சூடாகவும், சுவையாகவும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
The post அதிமுக எம்எல்ஏ தேன்மொழி பேச்சு ஆணவ கொலைகளை தடுக்க தனி சட்டம் வேண்டும் appeared first on Dinakaran.