அதிமுக உட்கட்சி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் கேவியட் மனு

1 week ago 2

புதுடெல்லி: அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விரிவாக விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் வழங்கிய உத்தரவில், ‘‘இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக உட்கட்சி விவகாரம் ஆகியவை தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்.

அதற்கு எந்தவித தடையும் இல்லை என்று தீர்ப்பளித்தனர். மேலும் இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்த மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் எதிர்மனுதாரராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அனைவரும் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

அதில், ‘‘இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக உட்கட்சி விவகாரம் ஆகியவை தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க தடையில்லை என்று உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி உட்பட யாரேனும் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தால், எங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்தவித உத்தரவையும் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.

The post அதிமுக உட்கட்சி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் கேவியட் மனு appeared first on Dinakaran.

Read Entire Article