
சென்னை,
பாமக நிறுவனர் ராமதாசுக்கும், மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே உட்கட்சி பிரச்சினை நிலவி வருகிறது. இருவரும் தங்களது தலைமையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தேர்தல் நெருங்கும் நிலையில், யாருடன் கூட்டணி என்பதை பாமக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. பாமக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் 2026 தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், அதிமுக உடன் தான் பாமக கூட்டணி வைக்கும் என அக்கட்சி எம்.எல்.ஏ சதாசிவம் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில், பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், எடப்பாடி பழனிசாமி வன்னியருக்கு மீண்டும் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவார். அவருடன் தான் கூட்டணி. வருங்கால கூட்டணி கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆட்சியில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கி, வன்னியருக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் பெருமை சேர்த்ததாக கூறினார்.