அதிமுக ஆலோசனை கூட்டத்துக்கு ஆளை காணோம் ‘ஏர் ஷோ’வால் யாரும் வரவில்லை: காலியாக இருந்த இருக்கையிடம் ‘கதைகட்டிய’ ஜெயக்குமார்

3 months ago 21

சென்னை: ராயபுரத்தில் சூரியநாராயண சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுக நிர்வாகிகளின் புதிய உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் வராததால் மண்டபத்தில் பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே காணப்பட்டன.
இதனையடுத்து பேசிய ஜெயக்குமார், “பொதுவாகவே என் தலைமையில் கூட்டம் நடத்தினால் ஆயிரம் பேர் மண்டபத்தில் இருப்பார்கள். ஆனால் மெரினா கடற்கரையில் ‘ஏர் ஷோ’ நடைபெறுவதால் எல்லோரும் அதற்குச் சென்று விட்டனர்.

இதனால் கூட்டம் குறைவாக உள்ளது. தமிழகத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிவித்துள்ளது. 40% ஆதிதிராவிட மக்களுக்கு தமிழ்நாட்டில் தாக்குதல்களும், பெரிய அளவில் பாதுகாப்பில்லாத சூழ்நிலையும் ஏற்பட்டு அவர்கள் துன்புறுத்தப்படும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அதிமுக சாதாரண சக்தி அல்ல, எம்ஜிஆர் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய சக்தியாக இருக்கிறது. பெரிய மலையா இருந்தாலும் தகர்க்கக்கூடிய சக்தி படைத்தது அதிமுக கட்சி மட்டுமே” என்றார்.

 

The post அதிமுக ஆலோசனை கூட்டத்துக்கு ஆளை காணோம் ‘ஏர் ஷோ’வால் யாரும் வரவில்லை: காலியாக இருந்த இருக்கையிடம் ‘கதைகட்டிய’ ஜெயக்குமார் appeared first on Dinakaran.

Read Entire Article