அதிமுக ஆட்சியை போல் எச்சரிக்கை கொடுக்காமல் சாத்தனூர் அணையை திறக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!!

2 months ago 9

சென்னை :சாத்தனூர் அணையில் நீர் திறப்பு குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். சாத்தனூர் அணை திறப்பு குறித்து மக்களுக்கு சரியான தகவலை சொல்லவில்லை என சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி கூறியதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள விளக்கத்தில் “அதிமுக ஆட்சியில், செம்பரம்பாக்கம் ஏரியை சொல்லாமல் திறந்து விட்ட காரணத்தினால் பெரிய வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 240 பேருக்கு மேல் உயிரிழந்தனர். செம்பரம்பாக்கம் ஏரியை அரசு யாருக்கும் சொல்லாமல் திறந்துவிட்டது என CAG அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரத்தில் உயிரிழப்புகளுக்கு காரணம் மனித தவறுகளே என அறிக்கையில் உள்ளது. அனுமதி வாங்க முடியாத காரணத்தால் வேறு வழியில்லாமல் திறந்துவிட்டார்கள். செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் ஏற்பட்ட பாதிப்பை விட, தற்போது பாதிப்பு குறைவு தான். சாத்தனூர் அணையை பொறுத்தவரை 5 முறை எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின் படிப்படியாக திறந்துவிடப்பட்டது. அதிமுக ஆட்சியை போல் எச்சரிக்கை கொடுக்காமல் தண்ணீர் திறக்கவில்லை. உரிய எச்சரிக்கை கொடுத்து சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் தான் பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post அதிமுக ஆட்சியை போல் எச்சரிக்கை கொடுக்காமல் சாத்தனூர் அணையை திறக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!! appeared first on Dinakaran.

Read Entire Article