தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலைய முதல் நிலை காவலர் பிரபாகரன், தனது தலைமைக் காவலர் பணியை ராஜினாமா செய்வதாக டிஜிபி.க்கு எழுதிய கடிதம் இணையத்தில் பரவிவருகிறது.
எம்-சாண்ட் மற்றும் ஜல்லி ஏற்றிய விதிமீறல் வாகனங்களை பிடித்துகொடுத்த நிலையில், அதை விடுவித்த உயரதிகாரிகள் தன்னை தரம்தாழ்ந்து பேசுவதாக குற்றம்சாட்டி உள்ளார். அனைத்து ஆதாரங்களும் தன்னிடம் உள்ளதாகவும் முதன்மைக் காவலர் பிரபாகரன் கூறியுள்ளார்.