சென்னை: தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்ரமணியன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியாவில் நாய்க்கடி சம்பவங்களில் அதிகமாக நடைபெறும் மாநிலங்களில் தமிழகத்திற்கு இரண்டாவது இடம் உள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 13 லட்சம் தெரு நாய்கள் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில் சமீப காலமாக தமிழ்நாடு முழுவதும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.பல தெருக்களில் அங்கும் இங்கும் சுற்றித் திரியும் தெரு நாய்கள் கடிப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக நாய்கள் தெருக்களில் வலம் வருவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அச்சம் அடைகின்றனர்.மேலும், நாய்க்கடி பிரச்னைகளால் ரேபிஸ் பாதிப்பும் அதிகரித்து வருவதால் இந்த பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து, தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தெருநாய்களை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. கருத்தடை செய்வது, கண்காணிப்பு, காப்பகத்துக்கு நாய்களை மாற்றுவது, ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
The post அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை : கருத்தடை செய்வது, ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!! appeared first on Dinakaran.