மகப்பேறு பெண் மருத்துவர் டாக்டர் ஷர்மிலி கூறியதாவது: போதிய வயது அடையாமல் பெண்கள் கர்ப்பம் அடையும்போது அது அவர்களுக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. சிறுவயதிலேயே அவர்கள் குழந்தைகளை கர்ப்பப்பையில் சுமக்கும் போது அவர்களுக்கு உண்டான ஊட்டச்சத்துகள் முழு அளவில் இருக்காது. அவர்களின் உடலும் முழு வளர்ச்சி பெற்று இருக்காது. பெரும்பாலும் இதுபோன்று வயது குறைவான கர்ப்பத்தில் வரும் பெண்கள் நடுத்தர அல்லது ஏழ்மை குடும்பத்து பெண்களாக இருப்பார்கள். இவர்களுக்கு தனியாக ஊட்டச்சத்துகளை வாங்கி சாப்பிட கூட வசதி இருக்காது. எனவே அவர்கள் உடல்நிலை மேலும் மோசம் அடைய வாய்ப்பு உள்ளது.
சிறு வயதிலேயே கர்ப்பம் அடைவதன் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வரும் உயர் ரத்த அழுத்த நோயால் சிறு வயதிலேயே கர்ப்பம் அடையும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். மேலும் முழுமையாக வளர்ச்சி அடையாத பருவத்தில் குழந்தை பெற்றுக் கொள்வதால் பெரும்பாலான நபர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே குழந்தைகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். இது பெண்களுக்கு பல்வேறு அசவுகரிங்களை ஏற்படுத்தும். மேலும் பிறக்கும் குழந்தைகளும் எடை குறைவாகவும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளாகவும் பிறக்க வாய்ப்புள்ளது. எனவே போதிய வயது மற்றும் உடல் தகுதி இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்வதால் எப்போதும் பெண்களுக்கு அது பிரச்னைகளை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.
The post அதிகரிக்கும் இளம் வயது கர்ப்பம்: பிரச்னைகள் என்னென்ன? appeared first on Dinakaran.