தென்னிந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால் தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆந்திராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அதிக குழந்தைகளை கொண்ட குடும்பங்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்குவது குறித்து தமது அரசு பரிசீலிப்பதாக கூறினார். 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியுடையவர்கள் என்ற சட்டத்தை கொண்டு வர தமது அரசு யோசித்து வருவதாகவும் சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டார்.
தென் மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருவதாக பேசிய அவர், ஆந்திரா மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள பல கிராமங்களில் வயதானவர்கள் மட்டுமே உள்ளதாக தெரிவித்தார்.