சென்னை: ஹிண்டன்பர்க் அறிக்கை முதல் இந்திய எரிசக்தி நிறுவனம் மீதான புரூக்ளினில் உள்ள நீதிமன்ற வழக்கு வரை அதானி குழுமம் செய்த அனைத்து முறைகேடுகளும் இந்தியப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்த முக்கியமான பிரச்சினையை நாடாளுமன்றம் விவாதிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர் நாளை (25.11.2024) நடைபெறுவதை முன்னிட்டு, அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம், நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி இதில் பங்கேற்று ஆற்றிய உரை விவரம்: இந்தியாவில் மின் கொள்முதல் ஒப்பந்தம் பெற அதிகாரிகளுக்கு ரூ.2200 கோடி கொடுத்ததாக அதானி குழுமம் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் லஞ்ச வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.