அதானி விவகாரத்தில் 3வது நாளாக கடும் அமளி: முடங்கியது நாடாளுமன்றம்

1 month ago 5


புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவ.25ம் தேதி தொடங்கியது. இந்தியாவில் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் பிரபல தொழில் அதிபர் அதானி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட விவகாரம், உபி மாநிலம் சம்பல் பகுதியில் நடந்த வன்முறை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் கடந்த 2 நாட்களாக அவை நடக்கவில்லை. நேற்றும் எதிர்க்கட்சி எம்பிகள் அதானி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் மக்களவை 3வது நாளாக ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை: அதானி விவகாரம் மாநிலங்களவையிலும் எதிரொலித்தது. அவை காலை 11 மணிக்கு தொடங்கியதும் அதானி விவகாரம் குறித்து விவாதிக்க 16 நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதை அவைத்தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் நிராகரித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியால் உடனே ஒத்திவைக்கப்பட்டது.

இதைதொடர்ந்து மதியம் 12 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்ததால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. வக்ப் மசோதா குழுவின் பதவிக் காலம் நீட்டிப்பு: வக்பு திருத்த மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பதவிக் காலத்தை அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாள் வரை நீட்டிக்கும் தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

The post அதானி விவகாரத்தில் 3வது நாளாக கடும் அமளி: முடங்கியது நாடாளுமன்றம் appeared first on Dinakaran.

Read Entire Article