அண்ணாமலை தொடர்ந்து முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை ஒருமையில் பேசுவது அரசியல் அநாகரீகத்தின் உச்சம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி!

4 months ago 15

சென்னை: அண்ணாமலை தொடர்ந்து முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை ஒருமையில் பேசுவது அரசியல் அநாகரீகத்தின் உச்சம் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். கரூரில் நடந்த பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் பேசினார். முன்னதாக கெட் அவுட் மோடி என்று கூறுவோம் என உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு பதிலடியாக அண்ணாமலை நேற்று கூட்டத்தில் ஆவேசமாக பேசினார்.

இதற்கு பதிலடியாக கொடுக்கும் விதமாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது; தமிழ்நாட்டுக்கு கல்வி நிதியை பெற்றுத் தர அண்ணாமலையால் இயவில்லை. தமிழ்நாட்டுக்கு தேவையான கல்வி நிதியை வழங்க ஒன்றிய அரசு மறுக்கும் நிலையில், அதனை திசைதிருப்ப பாஜகவினர் முயல்கின்றனர். ஏற்கனவே அறிவாலயம் பக்கம் வந்து என்னமோ செய்வேன் என்றார். முடிந்தால் அண்ணா சாலை பக்கம் வரச் சொல்லுங்கள் தைரியம் இருந்தால் என்று உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இந்த சம்பவம் எக்ஸ் தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

இந்நிலையில், சுயநினைவற்றவரைப் போல பிதற்றித் திரிகிறார் அண்ணாமலை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர்; அண்ணாமலை தொடர்ந்து முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை ஒருமையில் பேசுவது அரசியல் அநாகரீகத்தின் உச்சம். நாவடக்கம் அற்றவர், அநாகரீகமானவர் என்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அவர் நிலைக் கண்ணாடி முன்நின்றால் தன்னுடைய தற்குறித்தனங்கள் ஒவ்வொன்றாய் வரிசைக்கட்டி நிற்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post அண்ணாமலை தொடர்ந்து முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை ஒருமையில் பேசுவது அரசியல் அநாகரீகத்தின் உச்சம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி! appeared first on Dinakaran.

Read Entire Article