அண்ணாமலை ஆக்கப்பூர்வமான அரசியல் செய்யவில்லை: ஈஸ்வரன் பேட்டி

3 weeks ago 6

திருப்பூர்: கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் திருப்பூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பாஜ தலைவர் அண்ணாமலை வேண்டுதலை நிறைவேற்ற சாட்டையில் அடித்துள்ளார். அண்ணாமலை விளம்பர மற்றும் விமர்சன அரசியல் செய்கிறார். ஆக்கப்பூர்வமான அரசியல் செய்யவில்லை. அண்ணாமலை கொங்கு மண்டலத்தில் இருக்கின்ற ஜவுளி தொழிலை பாதுகாக்க வேண்டும். அப்படி ஒரு வேண்டுதலை வைத்துக்கொண்டு டெல்லிக்கு காவடி தூக்கி ஜவுளி தொழிலை பாதுகாப்பார் என்றால் தமிழ்நாட்டில் பாஜ வளர வாய்ப்பு இருக்கிறது.

பாமக பொதுக்குழு கூட்டத்தில் தந்தையும், மகனும் எதிரெதிரே வாக்குவாதம் செய்து கொண்ட சம்பவம் மறுநாள் நடைபெறும் என அண்ணாமலைக்கு தெரிந்திருந்தால் இந்த விளம்பர ஒத்திகையை அண்ணாமலை தள்ளிபோட்டு இருப்பார். பாமக பொதுக்குழு கூட்டத்தில் தந்தை ராமதாசும், மகன் அன்புமணியும் நேரலையில் பேட்டி கொடுப்பது போல தங்களது குடும்ப பிரச்சனையை மேடையில் பேசி இருப்பது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post அண்ணாமலை ஆக்கப்பூர்வமான அரசியல் செய்யவில்லை: ஈஸ்வரன் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article