அண்ணாநகர்: சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்த 25 வயது பெண் நேற்றிரவு திருமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது; எனது சொந்த ஊர் உத்தரபிரதேச மாநிலம். சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருவதால் திருமங்கலம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தங்கியுள்ளேன். நேற்றிரவு வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்றபோது பைக்கில் வந்த ஒரு வாலிபர் திடீரென என்னை பின்பக்கமாக தட்டிவிட்டு கேலி கிண்டல் செய்துவிட்டு சென்றுவிட்டார். இதுபோல் மற்ற பெண்களிடமும் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். எனவே தனியாக சாலையில் நடந்து செல்லும் பெண்களை நோட்டமிட்டு சில்மிஷம் செய்யும் நபரை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவித்திருந்தார்.
இதன் அடிப்படையில், போலீசார் வழக்குபதிவு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர். இதுபற்றி பொதுமக்கள் கூறும்போது, ‘’திருமங்கலம், அண்ணாநகர், முகப்பேர் பகுதிகள் விஐபி ஏரியா என்பதால் இந்த பகுதியில் ஆள் நடமாட்டம் குறைவாகத்தான் இருக்கும். இதனை பயன்படுத்தி மர்ம நபர்கள், பெண்களிடம் சில்மிஷம் செய்துவிட்டு பைக்கில் தப்பி சென்றுவிடுகின்றனர். எனவே போலீசார் ரோந்துவந்து மர்ம நபர்களை பிடிக்க வேண்டும்’’ என்றனர்.
The post அண்ணாநகர் பகுதியில் தனியாக செல்லும் பெண்களுக்கு தொல்லை கொடுப்பதாக புகார் appeared first on Dinakaran.