திருச்சி, டிச.13: திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுகை, கரூர், ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு இடையே மாணவிகளுக்கான நீச்சல் போட்டி திருச்சி அண்ணா விளையாட்டரங்க நீச்சல் குளத்தில் நடந்தது. திருச்சி, ஜமால் முகமது கல்லூரி சார்பில் நடத்தப்பட்ட இப்போட்டியில் 6 கல்லூரிகளிலிருந்து 40க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.
17 பிரிவின் கீழ் நடைபெற்ற நீச்சல் போட்டியில் பிஷப் ஹீபர் கல்லூரி 8 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கல பதக்கங்களை பெற்று முதலிடம் பிடித்து ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது. பிஷப் ஹீபர் கல்லூரியை சேர்ந்த மாணவி தனுஜா 8 தங்க பதக்கங்கள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜமால் முகமது கல்லூரி 6 தங்கம், 7 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களை பெற்று இரண்டாவது இடத்தையும், 2 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களுடன் பாரதிதாசன் துறைகள் அணி மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
மாணவியர்கள் பிரிவில் ஒட்டு மொத்த அணி சாம்பியன் பட்டம் பெற்ற திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரி மாணவி மற்றும் முதல்வர் பிரின்சி மெர்லின், துணை முதல்வர் சத்தியசீலன், சுயநிதி பிரிவு துணை முதல்வர் ரவிதாஸ், நிதியாளர் தனபால் உடற்கல்வி துறை தலைவர் பால்ராஜ் ஆகியோர் பாராட்டினர்.
The post அண்ணா விளையாட்டரங்கில் கல்லூரிகளுக்கு இடையே நீச்சல் போட்டி appeared first on Dinakaran.