UPI, RuPay பரிவர்த்தனைக்கு மீண்டும் MDR கட்டணம்: பழைய விதி மீண்டும் வருது! ஒன்றிய அரசு தகவல்

6 hours ago 2

2022ம் ஆண்டுக்கு முன்பு, UPI மற்றும் RuPay டெபிட் கார்டு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது, வணிகர்கள் வணிக தள்ளுபடி விகிதம் (MDR) எனப்படும் சிறிய கட்டணத்தை வங்கிகளுக்குச் செலுத்த வேண்டியிருந்தது. 2022ஆம் ஆண்டில் இந்தக் கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவற்றை மீண்டும் கொண்டுவர இப்போது மத்திய அரசு திட்டமிடுகிறது. இப்போது, ​​வாடிக்கையாளர்கள் செய்யும் UPI அல்லது RuPay டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு வணிகர்கள் எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. MDR கட்டணங்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டால், அது UPI மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களை நேரடியாகப் பாதிக்காது. ஆனால், அவர்கள் செலுத்தும் தொகையைப் பெறும் வணிகர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்தக் கட்டணத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான முன்மொழிவை தொழில்துறை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்புடைய துறைகள் இப்போது இதை பரிசீலித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே பெரிய வணிக நிறுவனங்கள் விசா, மாஸ்டர்கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு MDR கட்டணத்தைச் செலுத்துகின்றன. இந்த நிறுவனங்கள் இனி UPI மற்றும் RuPay டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கும் MDR கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதிகமாக பயன்படுத்தப்படும் ஆன்லைன் பரிவர்த்தனை முறையான UPI க்கு கட்டணம் செலுத்த வேண்டியிருந்தால் இந்தத் துறையில் உள்ள பல வணிக நிறுவனங்கள் லாபகரமாக இயங்குவது கடினமாகிவிடும் என்று நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

The post UPI, RuPay பரிவர்த்தனைக்கு மீண்டும் MDR கட்டணம்: பழைய விதி மீண்டும் வருது! ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article